Pages

Thursday, October 4, 2018

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பேராவூரணி அக்.04-
ஏப்ரல் 1  2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால ஊதியம் மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் அனைவருக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும்.

ஐந்தாயிரம் அரசு பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட்டு, சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும் தஞ்சை மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.

அதனொரு பகுதியாக பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ராஜசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் அ.நாவலரசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் என்.கோபி கிருஷ்ணா, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர்  ஸ்ரீ மகேஷ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஏ.மதிவாணன், வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் பி.கணேசன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்டத் தலைவர் எஸ்.பரசுராமன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  வீர.சந்திரசேகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க துறை வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 29 பெண்கள் உள்ளிட்ட 77 பேர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...