.

Pages

Tuesday, October 9, 2018

இந்திய விவசாய மேதை துபை மருத்துவமனையில் அனுமதி!

அதிரை நியூஸ்: அக்.09
இந்தியா, கேரளா மாநிலத்தை சேர்ந்த அனுபவ விவசாய மேதை உடல் நலக்குறைவால் துபை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

69 வயதான செருவயல் ராமன் என்கிற அனுபவ நாட்டுப்புற விவசாயி தனது நிகரற்ற சாதனைக்காக இந்திய அரசின்  (Indian government’s) National Plant Genome Saviour Award in 2016 என்கிற விருது வென்றவர் என்பதோடு இவ்விருதிற்கு முழுத்தகுதியானவரும் கூட.

இவருடைய பாரம்பரிய வீடும் வைக்போல் போரால் வேயப்பட்டது என்பதுடன் இதன் வயது 150 ஆண்டுகள் என்பதும் வியக்கத்தக்கது. வீட்டை பார்வையிடுவதற்காகவே வயநாடு மாவட்டத்தில் உள்ள இவரது வீட்டிற்கு அடிக்கடி சர்வதேச நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களும், ஆய்வு மாணவர்களும் வந்து செல்வதும் இன்னொரு புறம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

செருவயல் ராமன் தனது அயராத உழைப்பால் சுமார் 47 வகையான பாரம்பரிய நெல் விதைகள், மரங்கள், மூலிகைகள், நறுமணப் பொருட்கள் (மசாலா) ஆகியவற்றை அதன் தன்மை கெடாமல் சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளதுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் அவற்றை பிற விவசாயிகளுக்கும் வழங்கியும் வருகின்றார்.

இயற்கை விவசாய பாதுகாவலரான பள்ளி கல்வியை கூட பெறாத செ. ராமன் ஒர் நடமாடும் விவசாய பல்கலைக்கழகம் என்றும் கண்ணியத்தோடு அழைக்கப்படுகின்றார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசில் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு நெல்லின் மரபணு குறித்த தனது அனுபவ அறிவை கல்வியாளர்கள் மத்தியில் பகிர்ந்து வந்தார். இந்நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தான் முதன் முதலாக பாஸ்போர்ட்டே எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(The modest farmer had made a passport when he was invited to narrate the story of his gene bank at an international symposium held in Brazil in August)

செ. ராமன் தன்னுடைய பாரம்பரிய விவசாய முறைகளை பெருக்கும் நோக்குடன் ஏனைய பல விவசாயிகளுடன் ஒரு நெருக்கமான தொடர்பையும் தொடர்ந்து பேணி வருகின்றார். அதன் ஒரு தொடராக அமீரகம் அஜ்மானில் செயல்படும் Habitat School எனும் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்த இடத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துபை அல் ராஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்க்கு பின் சற்று உடல்நலம் தேறி உள்ளார்.

விசிட் விசாவில் அமீரகம் வந்துள்ள செ. ராமனுக்கு இன்ஷூரன்ஸ் இல்லாததால் மருத்துவக் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையுள்ளது. அவரது குடும்பத்தினர்களும் கல்வியறிவு பெறாதவர்கள் என்பதுடன் பாஸ்போர்ட்டும் இல்லாதவர் என்பதால் அவர்களாலும் உதவிக்கு உடனடியாக அமீரகம் வர இயலாத சூழல் உள்ளது. எனவே, இந்திய அரசும் இந்தியர்களும் அவருக்கு உதவ முன்வருவார்கள் என நம்புவதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.