.

Pages

Tuesday, October 16, 2018

துபையில் டிரைவர் இல்லா நடமாடும் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் அறிமுகம் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக்.16
ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் 2018 (Gitex Technology Week 2018) எனும் நவீன கருவிகளின் கண்காட்சி துபையில் ஞாயிறு முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் துபையின் பல்வேறு அரசுத்துறைகளிலும் இடம்பெறப் போகும் நவீன கருவிகள் காட்சி வைக்கப்பட்டு இயக்கிக் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

துபை போலீஸ் துறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள பல்வேறு நவீன மின்னனு கருவிகளை காட்சிப்படுத்தியிருந்தது. குறிப்பாக டிரைவர் இல்லா தானியங்கி வாகனத்தில் நடமாடும் போலீஸ் ஸ்டேஷன் (Driverless police station vehicle- The autonomous vehicle has a Smart Police Station (SPS), பல்வேறு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட போலீஸ் வாகனம் an advance vehicle called ('Ghayath’, a patrol equipped with latest technologies and Artificial Intelligence) மற்றும் ஆபத்து காலத்தில் உதவும் குட்டி விமானம் (டிரோன்) (Drone patrol box) ஆகியவை பெரிதும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தன.

டிரைவர் இல்லா தானியங்கி வாகன ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்:
இந்த வாகனம் துபை போலீஸ் ஆப் வழியாக புகார் தெரிப்பவர்களின் இடத்திற்கே சென்று புகார்களை பதிந்து வருவதுடன் 16 வகையான சேவைகளையும் கூடுதலாக வழங்கும். குறிப்பாக, போக்குவரத்து அபராதம் செலுத்துதல், போலீஸ் நன்னடத்தை சான்றிதல் வழங்குதல், கிரிமினல் வழக்குகளை பதிதல் போன்ற பல.

ஆரம்பக்கட்ட சோதனையில் உள்ள இந்த நடமாடும் போலீஸ் ஸ்டேஷன் விரைவில் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் நிறுத்தப்படும். ஜப்பானிய தொழிற்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்திற்கு வயர்லெஸ் சிஸ்டம் மூலம் ரீ-சார்ஜ் செய்யலாம். பேட்டரி மற்றும் சோலர் மின் சக்தியில் இயங்கக்கூடியது. இந்த வாகனதிற்குள் பிரவேசிக்க எமிரேட்ஸ் ஐடி அல்லது முக ஸ்கேனிங் அவசியம்.

கயாத் ஸ்மார்ட் போலீஸ் வாகனம்:
கயாத் (Ghayath) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன ரோந்து வாகனம் நவீன டெக்னாலஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு சிசிடிவி கேமிராக்களும் எட்டு திரைகளும் இருக்கும் இதன் மூலம் மக்களின் முகங்கள் ஸ்கேன் (Facial Recognition) செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதன் மூலம் போலீஸாரால் தேடப்படுபவர் பிடிபடுவார், தேடப்படும் கார்கள் பிடிபடும் மற்றும் போக்குவரத்து விபத்துக்களை கையாளும் திறனுடைய ஸ்மார்ட் சிஸ்டமும் உள்ளது.

நவீன போலீஸ் ரோந்து குட்டி விமானங்கள்:
துபை போலீஸாரின் சிசிடிவியால் கண்காணிக்கப்படாத பகுதிகளில் இந்த டிரோன்கள் (குட்டி விமானங்கள்) 19 நொடிகளில் சென்றடையும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும். அவசரகால தேவைகளின் போது மணிக்கு சுமார் 80 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த விமானமும் தானியங்கி (ஆளற்ற) கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படும். துபை போலீஸின் பாதுகாப்பு கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு;ள்ள இந்த டிரோன்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றவுடன் அதன் கேமிராக்கள் இயங்கத் துவங்கி நேரலையாக பதிவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

ஆரம்பமாக, துபை போலீஸாரின் சிசிடிவி கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத 19 பகுதிகளில் இது நிறுவப்படவுள்ளது. இந்த டிரோன்களில் துபை மாநகரின் வரைபடம் ஏற்கனவே முப்பரிமாணத்தில் (3D) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள சென்சார்கள் டிரோன்கள் கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் இதர பொருட்களின் மீது மோதிவிடாத வகையில் பாதுகாக்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.