Pages

Wednesday, October 3, 2018

தஞ்சை மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா விற்றால் கடை உரிமம் ரத்து ~ வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்டம், தடை செய்யப்பட்ட குட்கா, நிக்கோட்டின, பான்மசாலா, புகையிலை ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், கடையின் உரிமம் மற்றும் பதிவு ரத்து செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தமிழ்நாட்டில் குட்கா, நிக்கோட்டின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உள்ளடக்க பொருட்களாக கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த தடை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, நிக்கோட்டின், பான்மசாலா, புகையிலை ஆகிய பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் எடுத்துச் செல்வது, விநியோகிப்பது, சில்லரை விற்பனை செய்வது குற்றமாகும்.  அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட உணவு வணிக கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும்.  மொபைல் கடைகள், காலணி விற்பனையகம், பேன்ஸி ஸ்டோர், ஹார்டுவோர் கடைகள் போன்ற உணவு விற்பனை அல்லாத கடைகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா, நிக்கோட்டின், பான்மசாலா, புகையிலை ஆகிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவர்களின் தொழில் உரிமம் மற்றும் பதிவு ரத்து செய்யப்படும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, நிக்கோட்டின், பான்மசாலா, புகையிலை ஆகிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தால் வீட்டிற்கு சீல் வைக்கப்படும்.

பொது மக்கள் தடை செய்யப்பட்ட குட்கா, நிக்கோட்டின், பான்மசாலா, புகையிலை ஆகிய பொருட்களின் விற்பனை குறித்த தகவல்கள் மற்றும் உணவு பொருள் தொடர்பான அனைத்து புகார்களையும் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் உணவு பாதுகாப்புத்துறைக்கு தெரியப்படுத்தலாம்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...