Pages

Tuesday, October 2, 2018

அமீரகத்தில் குடியிருப்பு பகுதிகளில் தங்கி இருக்கும் பேச்சுலர்களை வெளியேற்ற திட்டம்!

அதிரை நியூஸ்: அக்.02
அமீரகத்தில் குடியிருப்பு பகுதிகளில் தங்கி இருக்கும் பேச்சுலர்களை வெளியேற்ற திட்டம்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது அமீரகத்தில் பாதுகாப்பு உணர்வு 96.8 என்று மேலோங்கியுள்ள போதிலும் சமீபகாலமாக குடும்பத்தினர்களாக வாழும் குடியிருப்புக்களுக்குள் பேச்சுலர்களும், வீடுகளை பகிர்ந்து கொண்டு வசிப்போர்களும் பெருகி வருவது மற்றும் குடும்ப குடியிருப்புகளுக்கு அருகாமையில் தொழிலாளர் குடியிருப்பு அமைந்திருப்பது ஆகியவை புதிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ளன.

இத்தகைய போக்கு குறித்து பல குடும்ப குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளதால் அந்தந்த பகுதிகளிலிருந்து பேச்சுலர்களை அப்புறப்படுத்தவும், அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்க தடை விதிக்கவும், தொழிலாளர் குடியிருப்புக்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேஜர் ஜெனரல் டாக்டர் அப்துல் குத்தூஸ் அப்துல் ரஸ்ஸாக் அல் ஒபைதலி அவர்கள் தெரிவித்தார். எனினும், எந்தப்பகுதிகள், எந்தெந்த குடியிருப்புக்கள் என்பது வெளிப்படையாக சொல்லப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...