Pages

Wednesday, October 3, 2018

செல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் வரத்து குறித்து பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக் கால்வாய் ஆற்றுப்பகுதிகளில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் எம்.பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களுடன்  இன்று (03.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், கல்யாணஓடை தலைப்பு பகுதியில் தண்ணீர் செல்வதை பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் பார்வையிட்டார். பின்னர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், துவரங்குறிச்சி அய்யனார் ஏரியில் கல்லணைக் கால்வாய் நீர்வரத்தின் மூலம் தண்ணீர் நிரம்பியுள்ளதையும், கீழபழஞ்சூர் அய்யனார் கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும், மழவேனிற்காடு சிப்பிமுறிச்சான் ஏரியில் கல்லணைக்கால்வாய் நீர்வரத்தின் மூலம் தண்ணீர் நிரம்பி வருவதையும் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் அவர்கள் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மாளியக்காடு, செல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் அரசு கூடுதல் செயலாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது கீழ்காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...