Pages

Monday, October 8, 2018

அரபிக் கடலில் உருவான 'லுபான்' புயல் தெற்கு ஓமனில் கரையை கடக்கக்கூடும்!

அதிரை நியூஸ்: அக்.08
அரபிக்கடலில் உருவாகியுள்ள வெப்ப மண்டலப் புயல் (Tropical Cyclone) ஓமனிலிருந்து சுமார் 1,040 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் லுபான் புயல் (Luban) மேலும் வலுவடைந்து தெற்கு ஓமன் கடலோரப் பகுதிகளை தாக்கும் என இந்திய வானிலை மையமும் எச்சரித்துள்ளது.

எனினும் சரியாக எந்த திசையில் நகர்ந்து கரையை கடக்கும் என்பதை தற்போதே அனுமானிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது மேலும் இப்புயலால் ஒரு வார காலத்திற்கு புயல் நகரும் பகுதிகளில் மழை பொழிதல் மற்றும் குளிர் நிலவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய 'மெனுக்கு' (Menuku) புயலால் ஓமன் மற்றும் ஏமனில் சுமார் 30 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததுடன் 12 பேரையும் இதுவரை காணவில்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.

லுபான் என்ற அரபி வார்த்தைக்கு 'குங்கிலியம்' என்று அர்த்தம். ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் பிசினான இது ஓர் நெடியேறும் வாசனை திரவியம் / நாட்டு மருந்து என தெரிகிறது. நம்ம கிராமப்புற பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வயது முதிர்ந்த பெண்மணிகள் 'பேய்க்கு குங்கிலியம் போட்ட மாதிரி இருக்கு' என ஹாஸ்யமாக சொல்வதை கேட்டுள்ளோம். இப்ப என்னடான்ன மனிதர்களுக்கே 'குங்கிலியம்' போட்டுவிடுமோ இந்த லுபான் புயல்?

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

வேண்டுகோள்:
குங்கிலியம் சம்பந்தமான விபரம் தெரிந்த சகோதரர்கள் விளக்கினால் அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...