தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பாக, கல்லூரியில் கணிதம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (சங்கமேட்டிக்ஸ்-2018) கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து உரை ஆற்றினார். கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் வாழ்த்துரை வழங்கி முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன், கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கினைப்பாளர் என். ஜெயவீரன், கணினி அறிவியல்துறை இணைப் பேராசிரியர் ஏ. ஷேக் அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் சிறப்புரையாற்றினார். கணிதத்துறை இணைப் பேராசிரியர் என். வீரபாண்டியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் கணிதத்துறை மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 300 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள், தற்போது செய்து வரும் பணிகள் மற்றும் ஆற்றிய சாதனைகள் குறித்தும், கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்தும், துறை சார்ந்த பேராசிரியர்கள் தங்களுக்கு எந்த வகையில் ஏணியாக விளங்கினார்கள் என்பது குறித்து பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 53 வருடங்களுக்கு முன்பு கணிதத்துறையில் பயின்றவர்கள் பங்குபெற்று தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி முடிவில் கணிதத்துறை உதவிப்பேராசிரியர் எஸ். அப்பாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கணிதத்துறை இணைப் பேராசிரியர் டி.லெனின் தலைமையில், உதவிப் பேராசிரியர் எம்.சுமதி மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி கண்காணிப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
The great day of my life😍
ReplyDelete