Pages

Wednesday, October 10, 2018

துபையில் ஸ்மார்ட் தானியங்கி மையமாக மாறும் ஓட்டுநர் உரிமம் சேவை (வீடியோ)

அதிரை நியூஸ்: அக். 10
துபை போக்குவரத்து துறையின் 14 ஓட்டுனர் சோதனை மையங்களும் ஸ்மார்ட் தானியங்கி மையங்களாக மாறுகின்றன

துபை போக்குவரத்துத் துறையின் (RTA) கீழ் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்காக 14 மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களை அனைத்துமே இந்த வருட இறுதிக்குள் தானியங்கி ஸ்மார்ட் ஓட்டுனர் சோதனை மையங்களாக மாறுகின்றன. எனவே, உங்களின் டிரைவிங் திறன் குறித்து மதிப்பிடப்போவது கேமிராவும் கம்ப்யூட்டர்களுமே! மனிதர்கள் அல்ல.

இந்த ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ் திட்டப்படி உங்களுடைய சறுக்கையில் ஏறும் சோதனை, அவசரகால பிரேக் சோதனை, இணையாக நிறுத்தும் சோதனை, கேரேஜ் உள் நிறுத்தும் சோதனை மற்றும் சரியான கோணத்தில் நிறுத்தும் சோதனை ஆகியவை தானியங்கி ஸ்மார்ட் சோதனை முறைக்கு மாறுகின்றன.

கடந்த 2018 பிப்ரவரி மாதம் அல் கைல் ஓட்டுனர் சோதனை மையத்தில் முதன் முதலாக ஸ்மார்ட் வாகன ஓட்டுனர் பரிசோதனைகள் ஆரம்பமாயின. கடந்த செப்டம்பர் மாதம் இது இன்னும் 6 மையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நடப்பு அக்டோபர் மாத இறுதிக்குள் மேலும் 3 மையங்களில் இச்சோதனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எஞ்சிய 4 மையங்களும் இவ்வருட இறுதிக்குள் ஸ்மார்ட் ஓட்டுனர் சோதனை மையங்களாக மாறும் என துபை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் இந்த பரிசோதனைகளின் போது 20 சென்சார்கள்,  5 கேமிராக்கள், செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஓட்டுனரின் அசைவு திறன்கள் ஆகியவை கம்ப்யூட்டர் வழியாகவும், கண்காணிப்பு கோபுரத்திலிருந்து கண்காணிக்கும் அதிகாரியின் மதிப்பீடுகள் வழியாகவும் அளவிடப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவதா அல்லது நிராகரிப்பதா என்பது முடிவு செய்யப்படும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...