Pages

Sunday, October 7, 2018

ஆலடிக்குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 07
அதிராம்பட்டினம் பேரூராட்சி ஆலடிக்குளத்திற்கு நசுவுனி ஆற்று ஓடையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பம்பிங் மூலம் இறைத்து ஆலடிக்குளத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டு வரப்பட்டன.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொதுநிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து, ஆலடி குளம், செக்கடி குளம், மன்னப்பங்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர் இறைக்கப்பட்டது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து வெளியேறும் நீரை பம்பிங் மூலம் இறைத்து கொண்டு வரப்பட்டன.

இவற்றை, அதிரை பேரூர் முன்னாள் துணைச்சேர்மன் ஏ.பிச்சை, அதிரை கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார், ஹாஜா பகுருதீன், செல்வம், ராஜூ, அசோக் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...