Pages

Monday, October 8, 2018

ஓட்டுநர் உரிமம் சேவை: இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தலாம் ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், போக்குவரத்துறையில் ஓட்டுநர் உரிமம் சேவை சம்பந்தமாக பொது மக்களுக்கு கணினி மூலம் (பணமில்லா பரிவர்த்தனை) இணைய தளம் மூலம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது:-
01.03.2017 முதல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) மற்றும் பகுதி அலுவலகங்களில், ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் (பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், முகவரி மாற்றம், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு அதற்குரிய கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக செலுத்தி வருவதை 01.10.2018 முதல் மேற்கண்ட சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன் லைன் மூலம் செலுத்தி பயன் பெறலாம்.
 
மேற்கண்ட சேவைகள் http://parivahan.gov.in/sarathiservicecov6/sarathi HomePublic.do  இணைய தளத்தினை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம். வங்கி இணைய சேவை மூலமாக டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாக விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இணைய தளம் மூலம் இரசீதை உருவாக்கி அதை அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். செலுத்திய பின் ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய இரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்குச் சென்று தகுந்த Test-ல் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து உரிமத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

இருப்பிடத்திலிருந்தே மனு செய்தால் 24 மணி நேரமும் வங்கி வழியாக பணம் செலுத்துவதன் மூலம், பொது மக்களுக்கு மிகவும் சுலபமாக அவர்களுடைய ஓய்வு நேரத்திலே கட்டணம் செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...