Pages

Wednesday, October 17, 2018

அமீரகத்தில் இயக்க ~ ரசிக்க ~ உகந்த அற்புதமான சாலைகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக்.17
அமீரகத்தில் அமைந்துள்ள சாலைகள் இயல்பாகவே வாகனங்களை இயக்க உகந்த சாலைகளாக தான் அமைக்கப்பட்டுள்ளன என்றாலும் இயற்கை அழகுகள் நிரம்பிய மலை பிரதேசங்களிலும் பாலைவன பெருவெளிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் இன்னும் உணர்வுகளில் உற்சாகத்தை பெருக்கெடுத்து ஓடச்செய்பவை என்றால் அது மிகையல்ல.

ஜபல் அல் ஜைஸ் மலைச்சாலை: (Jabal Al Jais) 
ராஸ் அல் கைமாவில் அமைந்துள்ள ஜபல் அல் ஜைஸ் எனும் மலைத்தொடரே அமீரகத்தின் மிக உயரமான சிகரமாகும், இதன் அளவு 6,268 அடி உயரமாகும். வாகனங்களை ஓட்டிச் சென்று உச்சியை அடைந்தால் ஒருபுறம் எழில்மிகு மலைத்தொடரையும் இன்னொருபுறம் ராஸ் அல் கைமாவின் துறைமுகத்தை தரிசிக்கலாம்.
 
ஜபல் அல் ஹபீத் மலைச்சாலை: (Jabal Al Hafeet)
அல் அய்ன் நகரில் அமைந்துள்ள இந்த மலைச்சாலையில் மொத்தம் 60 வளைவுகளும் திருப்பங்களும் (Twists & Bends) உள்ளன. இரவு நேரங்களிலும் குளிர்காலத்திலும் இதில் பயணித்து அனுபவிப்பதே அலாதியானது.
 
 
ஷார்ஜா – கல்பா மலைச்சாலை: (Sharjah - Kalba Road)
அழகிய பாலைவனத்தையும் மலைத்தொடர்களையும் கடந்து செல்லும் இந்த சாலையின் சிறப்பே அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 1.27 கி.மீ தூரத்திற்கான சுரங்கவழிப்பாதை (Tunnel) தான். இதன் முடிவில் புஜைரா நகரின் தோற்றம் மிகத்தொலைவில் தென்படத் துவங்கும். இந்த சுரங்கப் பாதையில் உங்கள் வாகனத்தை நிறுத்தி ரசிக்காமல் ஒரு அடி கூட நகர உங்கள் உள்மனம் அனுமதிக்காது.
 
 
 
லிவா பாலைவனச் சோலை செல்லும் சாலை: (Liwa Oasis Road)
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் பங்கிட்டுக் கொள்ளும் உலகின் மிகப்பெரும் பாலைவனப் பெருவெளியான ரூப் அல் கைல் (Rub Al Khail) எனப்படும் பாலைவனத்தின் அமீரக பகுதி தான் இந்த லிவா பாலைவனச் சோலை. மணல் முகடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பாலைவனச் சோலையின் நடுவே தோட்டங்களும், சுற்றுலாவாசிகளுக்கான ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளும் அமைந்துள்ளன. பலைவனத்தின் மணல் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த லிவா சாலை உங்களின் நினைவலைகளில் என்றென்றும் பசுமையாய் பதிவது நிச்சயம்.
 
 
 

Sources: Khaleej Times & Google
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...