Pages

Friday, October 5, 2018

அதிரையில் மழைகால முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த முஸ்லீம் லீக் ஊடகப்பிரிவு கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக். 05-
தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் நாளை மறுதினம் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும், சிவப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு அறிவிப்பை அடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தஞ்சை தெற்கு மாவட்ட ஊடகப் பிரிவின் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன,

அதில், அதிரையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்டெடுக்க வேண்டும், மழையினால் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

இந்த மனுவை அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஊடகப்பிரிவு பொருப்பாளர் ஏ.சாகுல் ஹமீது முன்னிலையில், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, அமீரக காயிதே மில்லத் பேரவை எம்.எஸ் முகமது இக்ரம், பரக்கத், அப்துல் காதர் உள்ளிட்ட முஸ்லிம் லீக் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேரூராட்சி அலுவலர் சரவனனிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...