Pages

Monday, October 15, 2018

பயிர் காப்பீடு விழிப்புணர்வு ரதம் ~ ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.10.2018) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பயிர் காப்பீடு விழிப்புணர்வு ரதத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2018 சம்பா மற்றும் தாளடி ராபி நெல்-ஐஐ பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்திட விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிர் காப்பீடு தொடர்பான விளம்பர பலகைகள், கலைக் குழுவினர் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களை கொண்ட விழிப்புணர்வு ரதம் மூலம் 15.10.2018, 16.10.2018 ஆகிய தினங்களில் தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளிடையே பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பயிர் காப்பீடு செய்ய தேவையான  ஆவணங்கள் மற்றும் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், வேளாண்மைத்து துறை இணை இயக்குநர் (பொ) ஜஸ்டின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்கள் ஈஸ்வர், சாருமதி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...