அதிரை நியூஸ்: அக்.13
துபையில் வாடகை கார் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அன் லிமிடெட் விடுமுறை எடுக்கும் வசதி அறிமுகம்!
துபையை தலைமையாகமாக கொண்டு செயல்படும் வாடகை கார் நிறுவனமான 'கரீம்' (Careem) தன்னுடைய ஊழியர்கள் அனைவரும் விரும்பிய அளவிற்கு கணக்கற்ற வகையில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
பொதுவாக அரபு நாடுகளில் வருடத்திற்கு 30 நாட்கள் என ஆண்டு விடுமுறைகள் எண்ணித்தரப்படும். ஒரு சில நிறுவனங்கள் 1 நாள் தாமதமாக வந்தால் கூட சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பும் நடைமுறையையும் கொண்டுள்ளன. ஒரு சில நிறுவனங்களில் கூடுதல் விடுமுறைக்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் உள்ளன.
கரீம் கார் வாடகை நிறுவனம் மேற்படி கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி வருடந்தோறும் வேண்டிய அளவிற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகையை வழங்கியுள்ளது இதன் மூலம் நிறுவனமும் புத்துணர்ச்சியுடன் வரும் ஊழியர்களும் பரஸ்பர நன்மை பெறுவர் என எதிர்பார்க்கின்றது.
https://blog.careem.com/en/careem-employees-unlimited-vacation/
வேண்டிய அளவு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என இதற்கு முன் Netflix and Virgin group ஆகியவை நடைமுறைப்படுத்தி வரவதன் அடிப்படையிலேயே கரீம் நிறுவனமும் அமீரகத்தில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முறை மேலும் பல நிறுவனங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை:
நிறுவனங்கள் வேண்டிய அளவு விடுமுறைகளை வழங்கினாலும் அமீரக சட்டப்படி 6 மாதங்களுக்குள் (180 நாட்கள்) உள்ளே வராதவர்களின் விசாக்கள் தானாக ரத்து ஆகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க.
6 மாத கால அளவு குறித்து அமீரக சட்டம் சொல்வதென்ன?
https://www.khaleejtimes.com/legalview/uae-residence-visa-gets-cancelled-/automatically-after-6-months
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.