Pages

Tuesday, October 16, 2018

அதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 16
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார், பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் ஆகியோர் தலைமையில்,  அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பேருந்து நிலைய வர்த்தகர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், அதிரை பேரூர் டெங்கு கொசு உற்பத்திப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு மருந்து தெளிக்கப்பட்டன.

இதில், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் முத்துலெட்சுமி, அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசாருதீன், முருகேஷ்,  துப்புரவு மேற்பார்வையாளர் இராம. வெங்கடேசன் மற்றும் டெங்கு களப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...