Pages

Saturday, October 6, 2018

அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம் அக்.06-
இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் தனித்தனியே ஆய்வு மேற்கொண்டனர்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள கொள்ளுக்காடு, சேதுபாவாசத்திரம், பிள்ளையார்திடல் ஆகிய இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் பி.மந்திராசலம் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது, மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி சரி செய்யுமாறும், மழை நீர் வழிந்தோடி கடலில் சென்று சேருமாறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்விளக்குகளை ஒளிரும் வகையில் செய்ய வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர் வசதி, அவசர காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் வசதி, அவர்களுக்கு உணவு வசதி, மின்சார வசதி ஆகியவை சரியாக செய்யப்பட்டுள்ளதா என முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

பின்னர் பேசிய மாவட்ட அலுவலர்கள், "ஒன்றிய அலுவலகங்களில் முழு நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அதிகாரிகள் கண்காணித்து உரிய ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மழைக்காலமாக இருப்பதால் குடிநீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்யவும். கிருமி நீக்கம் செய்யப்பட்ட குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவசரகால உதவிகளுக்கு 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஐ. மகாலெட்சுமி, முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியர் லலிதா, வட்டாட்சியர்கள் பேராவூரணி பாஸ்கரன், பட்டுக்கோட்டை சாந்தகுமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆணையர்கள் கோவிந்தராசு, கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், சீனிவாசன், மதிவாணன் மற்றும் வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...