Pages

Saturday, October 13, 2018

தஞ்சையில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி ~ செய்முறை விளக்கப் பயிற்சி (படங்கள்)

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற
விழிப்புணர்வு பேரணி மற்றும் பேரிடர் மீட்பு செய்முறை பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்து கொண்டார் 

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ரயிலடியில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தினை முன்னிட்டு  நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (13.10.2018) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தினை முன்னிட்டு தஞ்சாவூர் ரயிலடியில் சுமார் 500க்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணி ஆற்றுப்பாலம் வழியாக கல்லணைக்கால்வாயின் கரையோரம் நிறைவு பெற்றது.  பின்னர் கல்லணை கால்வாய்  கரையோரம் நடைபெற்ற பேரிடர் மீட்பு செய்முறை விளக்க பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

செய்முறை விளக்க பயிற்சியில் வெள்ளத்திலும், பேரிடரிலும் பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், வெள்ள மற்றும் அவசர காலங்களில் தேவைப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களின் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவர் ந.சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், உதவி ஆணையர் (கலால்) தனசெல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருணகிரி, பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...