.

Pages

Wednesday, October 10, 2018

அமீரகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இந்தியருக்கு மருத்துவத்தையும் தாண்டி உதவிய மருத்துவர்!

அதிரை நியூஸ்: அக்.10
அமீரகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இந்தியருக்கு மருத்துவத்தையும் தாண்டி உதவிய மருத்துவர்

ஷார்ஜாவின் பாலைவனப் பகுதியிலுள்ள ஓர் சாலையோரம் இந்தியர் ஒருவர் மயங்கிக் கிடப்பதை கண்ட போலீஸார் அவரை மீட்டு அல் கஸ்ஸீமி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு The haematoma  என்ற நோய் ஏற்பட்டுள்ளதையும் அதன் காரணமாக அவரது மூளையின் ஒரு பாகத்தில் இரத்தம் உறைந்து போயுள்ளதையும் கண்டறிந்தனர். இந்த இரத்த உறைவின் காரணமாக அவர் பேசும் சக்தியை முழுமையாகவும், ஞாபக சக்தியை பெருமளவிலும் இழந்திருந்தார்.

அவருடைய அழுக்கான உடையில் பீய்ந்து நசுங்கிப் போயிருந்த பர்ஸில் சில பேப்பர் துண்டுகளும் 2014 ஆம் ஆண்டு அவர் அமீரகத்திற்குள் விசிட் விசாவில் வந்த விசா காப்பியும் கிழிந்த நிலையில் இருந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு அவரை அடையாளம் காண மூற்பட்டபோது தோல்வியே மிஞ்சியது. அவருடைய மூளையில் உறைந்த இரத்தத்தை வெற்றிகரமாக டாக்டர் சதீஷ் கிருண்னன் நீக்க, அவருடைய விசிட் விசாவில் காணப்பட்ட முகவரியின் அடிப்படையில் அவருடன் தெலுங்கில் பேசி விபரங்கள் தெரிந்து கொள்ள ஒரு தெலுங்கு பேசும் நர்ஸ் ஒருவரும் முயன்று கொண்டிருந்தார்.

விஜய பால ராவ் என்ற இந்த நபரைப் பற்றி அமீரகத்தில் யாருமே அறிந்திராத நிலையில் அமீரகத்தில் செயல்படும் ஏக்தா என்ற தன்னார்வலர் அமைப்பின் வழியாக தெலுங்கு பத்திரிக்கையில் இவரைப் பற்றிய செய்தியை பிரசுரிக்க, இந்த செய்தி நண்பர் ஒருவர் வழியாக விஜய பால ராவின் அண்ணனை சென்றடைய, இந்திய தூதரகமும் அவருக்கான அவுட் பாஸை வழங்கியது. அல் கஸ்ஸீமி மருத்துவமனையும் இவருடைய சிகிச்சை கட்டணமான 80,000 திர்ஹத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்து உதவியுள்ளது.

இதில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், டாக்டர் சதீஷ் கிருஷ்ணன் அவருக்கு சிகிச்சையளித்ததுடன் நின்று கொள்ளாமல் விஜய பால ராவின் குடும்பத்தை கண்டுபிடிப்பது தொடங்கி, அவரை சேர்த்து வைப்பது வரை அனைத்து நிலையிலும் தனது முழுமையான பங்களிப்பையும் உதவிகளையும் செய்துள்ளார், மருத்துவ கட்டண தள்ளுபடி உட்பட. மேலும் அவர் படிப்படியாக பேசும் சக்தியை திரும்பப் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.