Pages

Monday, October 15, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.15
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் அ. பாண்டுரங்கன், காதிர் முகைதீன் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.எம் உதுமான் முகையதீன் ஆகியோர்    முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வை நடத்தினர். இதில், மாணவி சே.ஜெயஸ்ரீ , கலந்துகொண்டு தனது புதிய கண்டுபிடிப்பான 'ஸ்பைனல் அலுமினிய நானோ வினையூக்கியின் தயாரிப்பு மட்டும் இயல்பாய்வு சோதனைகள்' பற்றிய முடிவுகளை விரிவாக எடுத்துரைத்தார். மேலும், பேராசிரியர்கள், மாணவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் (பொ) எம்.முகமது முகைதீன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில், மாணவி சே.ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...