அதிராம்பட்டினம், அக்.07
நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியின் வறண்ட குளங்களுக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி, கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளிலும், கடந்த செப்.17 ந் தேதி, இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 600 க்கும் மேற்பட்ட நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். மேலும், இவர்கள் கடந்த செப். 24 ந்தேதி சந்தித்து மீண்டும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக ஆற்று நீர்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்து சேர்ந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆற்றுநீர் காட்டுக்குளத்திற்கு வந்தது இப்பகுதியினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, நேற்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அவ்வமைப்பினர் மற்றும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத் தலைவர் சபீர் தலைமையில் அவ்வமைப்பினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர். இதில், வாய்க்கால் அடைப்பு, உடைப்பு ஆகியவற்றை சீர்செய்தனர். மேலும், அதிரை பேரூர் துப்புரவுப் பணியாளர்கள் அடைப்புகளை சீர் செய்யும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டனர்.
தண்ணீர் வரத்து இன்னும் சில தினங்களுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து வந்தடைந்தால், காட்டுக்குளம் முழுவதும் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் உள்ள மரைக்கா குளம், செக்கடிக்குளம் ஆகியவற்றிற்கு தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.