Pages

Saturday, October 13, 2018

ஏரி வடிகாலை தூர் வாரி சீரமைக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக்.13
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி வடிகாலை முறையாகத் தூர் வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் பொழியும் பருவ மழையின் போது, தொக்காலிக்காடு, மஹாராஜா சமுத்திர அணைக்கட்டு அக்னியாற்றின் உபரி நீர் வெளியேறி, ஏரிப்புறக்கரை பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றில் நிரம்பி வழிந்து, பின்னர், ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, ஏரிப்புறக்கரை கிராம சாலை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) வாய்க்கால் வழியாக கடலில் வீணாகக் கலக்கும்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக ஏரி வடிகால் முறையாக தூர் வாரப்படாததால், அண்மையில் பெய்த மழையின்போது வெளியேறிய உபரி நீர் ஆங்காங்கே தேங்கிக் காணப்படுகிறது. இந்த நீரில் குடியிருப்பு கழிவு நீர் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. வாய்க்காலை ஒட்டி அமைந்துள்ள பேரிடர் வெள்ள அபாய எச்சரிக்கைப் பகுதிகளான பிலால் நகர், ஆதம் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த வாய்க்கால் வழியாக வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை, கடற்கரைத்தெரு வெட்டிக்குளத்திற்கு டீசல் இஞ்சின் மூலம் இறைத்து நிரப்பிவருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குளத்தில் நீர் நிரப்பும் பணிக்காக, கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகக் கமிட்டி பராமரிப்பில் இருந்து வரும் இக்குளத்தின் புனரமைப்பு பணிகள் அப்பகுதி தன்னார்வலர்களின் பெரும் பங்களிப்போடு பல லட்சம் பொருட்செலவில் அண்மையில் நடந்து முடிந்துள்ளன. இந்த வாய்க்காலில் சூழ்ந்துள்ள குடியிருப்பு கழிவு நீரால், இதன் இணைப்பில் உள்ள வெட்டிக்குளம், வெள்ளக்குளம் போன்ற குளங்களுக்கு நீர் நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி வடிகாலை முறையாகத் தூர் வாரி சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...