Pages

Tuesday, October 9, 2018

புதுத்தெரு கழிவுநீர் வடிகால் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டது !

அதிராம்பட்டினம், அக்.09
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 தெருக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புதுத்தெரு குடியிருப்பு வழியாக செல்கின்றன. பல ஆண்டுகளாக இங்குள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளதால், குடியிருப்பு சாலையில் கழிவு நீர் தேங்கி விடுகின்றன. மழைகாலமாக இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, முறையான வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட பேரூர் நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தது இருந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மேற்பார்வையில், புதுத்தெரு தென்புறத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் ஜேசிபி இயந்திரம் மூலம், பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் உதவியோடு திங்கள்கிழமை காலை தூர் வாரப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...