Pages

Wednesday, October 10, 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நேரந்தவறாத சேவையில் உலகின் மிகச்சிறந்த நிறுவனமாக தேர்வு!

அதிரை நியூஸ்: அக்.10
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எனும் இலங்கை விமான நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் உலகளவில் 91.37 புள்ளிகள் பெற்று நேரந்தவறாத புறப்பாடு மற்றும் வருகை சேவையில் "World's Most Punctual Airline"எனும் முதல் நிலையை பெற்றுள்ளதாக Global flight data analysis company Flightstats எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு உலகின் மிக முக்கியமான 41 விமான சேவை நிறுவனங்கள் மற்றும் தரமான சேவைகளை வழங்கும் பெரிய விமான நிறுவனங்களுக்கிடையே ஆய்வு செய்யப்பட்டு தரவரிசையில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு "Data analysed by Flightstats under the key categories of  "Global Airlines" and "Major Airlines" ஆகியவை வழங்கும் வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The data showed that 91.37 per cent of SriLankan Airlines flights in September were on time.

The statement said that Flightstats had analysed data of 41 carriers from Europe, North America, Asia, the Middle East and South America, including most of the world's largest and most prestigious airlines.

இதற்கு முன் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பயணிகளின் அனுபவ குறிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. உலகின் சுமார் 470 விமான சேவை நிறுவனங்களில் 12% விமான நிறுவனங்கள் மட்டுமே 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றள்ளன. 14% விமான நிறுவனங்கள் மட்டுமே 4 நட்சத்திர அந்தஸ்தை தட்டிச் சென்றுள்ளன, அவற்றில் ஒன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமான நிறுவனம் 47 நாடுகளின் சுமார் 150 வான்தடங்களுக்கு நேரடியாகவும், உலகின் 160 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 வான்தடங்களுக்கு பிற பன்னாட்டு விமான நிறுவனங்களுடன் (Oneworld’s worldwide network) கூட்டாகவும் சேவை வழங்கி வருகின்றது.

குறிப்பு: சர்வதேச விருதுகள் ஒருபுறமென்றால் இன்னொரு புறம் ஏர் இந்தியா நிறுவனத்தைப் போல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூம் அதன் அதிகாரவர்க்க ஊழல்களால் பொருளாதார பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...