Pages

Tuesday, October 2, 2018

துபையில் GITEX ஷாப்பர்ஸ் பொருட்காட்சி கோலாகலமாக தொடக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக்.02
துபையில் ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் எனும் மின்சாதன பொருட்களுக்கான 5 நாள் விற்பனை பொருட்காட்சி இன்று அக்.02 கோலாகலமாக தொடங்கியது.

இன்று 02.10.2018 முதல் 07.10.2018 வரை நடைபெறும் வருடம் இருமுறை லேட்டஸ்ட் மின்சாதனப் பொருட்களுக்கான ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex Shoppers) விற்பனை பொருட்காட்சி துவங்கியது. துபை வேல்டு டிரேட் சென்டர் ஜபீல் ஹால் 4-6 இல் நடைபெற்று வரும் இப்பொருட்காட்சியில் சந்தையில் அறிமுகமாயுள்ள புதிய மொபைல்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள், டிவிக்கள் போன்ற பல மின் சாதனங்கள் சில்லறை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அதிரடி பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த வருடம் குறைந்தபட்சம் 300 திர்ஹத்திற்கு இந்த ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவச பார்க்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் 20 திர்ஹம், 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் திறந்திருக்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...