Pages

Wednesday, October 10, 2018

தஞ்சையில் 'தகவல் அறியும் உரிமை சட்டம்' (RTI) விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (10.10.2018) கலந்து கொண்டார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்;ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
இந்திய குடிமக்கள் அனைவரும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசு அலுவலகங்கள், அரசு சார்பு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள பதிவேடு ஆவணங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் இதர தகவல்கள் குறித்து விண்ணப்பித்து விபரங்களை பெறலாம். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவை தகவல் உரிமைச்சட்டத்தின் நோக்கமாகும்.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை அறிந்து கொள்ள, விவரங்கள் குறித்த மனுவை தயார் செய்து, ரூ.10 கோர்ட் வில்லை ஒட்டி சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

பொது தகவல் அலுவலர் மனு கிடைக்க பெற்ற 30 நாட்களுக்குள் மனுதாரர் கோரிய விவரங்களை அளிக்க வேண்டும். பொது தகவல் அலுவலரிடமிருந்து தகவல் கிடைக்க பெறவில்லையெனில், மனுதாரர் மேல் முறையீட்டு அலுவலரிடம் மனு அளிக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் கிடையாது. மேலும், இச்சட்டத்தின் கீழ் அறிவுரைகள், நிர்வாக நடவடிக்கை, பதிவு செய்யப்படாத விவரங்கள் போன்றவற்றை பெற இயலாது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...