Pages

Tuesday, October 2, 2018

பட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் மதுஒழிப்பு அமைதிப் பேரணி (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக். 02
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், மதுஒழிப்பு அமைதிப் பேரணி பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஷீத் மிஸ்க் மதுவின் தீமை பற்றி உரை நிகழ்த்தினார்.

பேரணியில், மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை அவ்வமைப்பினர் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச்சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி, அவ்வமைப்பின் பட்டுக்கோட்டை வடசேரி சாலை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, பிள்ளையார் கோவில் தெரு, பெரிய தெரு வழியாக மணிக்குண்டு சென்றடைந்தது. பேரணியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இப்பேரணியில், அவ்வமைப்பின் மாவட்ட செயலாளர் வல்லம் பாட்சா, பொருளாளர் எம் அஸ்ரப் அலி, துணைத் தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர்கள் ஹிதாயத்துல்லா, அப்துல் கரீம் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட துணைச்செயலாளர் எச்.ஜாபர் அலி நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...