Pages

Friday, November 2, 2018

சவுதியில் 18 வருடங்களாக நோயாளிகளை தேடிச்சென்று சிகிச்சை வழங்கும் மருத்துவர்!

அதிரை நியூஸ்: நவ.02
நாமிருக்கும் இடத்திற்கு மக்களை வரவழைப்பதை விட அவர்களை தேடிச்சென்று சிகிச்சை தருவதே அழகிய செயல் எனக்கூறுகிறார் சவுதியைச் சேர்ந்த டாக்டர் காலித் அல் ஒதைபி. இவர் 1996 ஆம் ஆண்டு கனடாவில் டாக்டர் பட்டம் பெற்றது முதலே நோயாளிகளை தேடிச்சென்று சிகிச்சையளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

என்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர், சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக சிகிச்சைகள் தொடர்பான ஆலோசணைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த மருத்துவர் மத்திய கிழக்கு நாடுகளிலிலேயே முதன்முதலாக சிறுநீரக நரம்பியல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் என்ற சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.

Al-Otaibi, an endoscopic surgeon and a consultant urologist and nephrologist, considers that a doctor who volunteers to reach out to patients is more compassionate than others who make them wait for appointments and bear the burden of traveling to their clinics.

Al-Otaibi, who is considered the first surgeon to perform renal nephropathy operation in the Middle East in 1996, tells Al-Arabiya English how he would dedicate days from his annual leave to visit patients.

தனது விடுமுறை நாட்களை பயனுள்ள ஒன்றாக பயன்படுத்தி வரும் இவரது சேவைகள் சவுதி அரேபியாவுடன் நின்றுவிடவில்லை மாறாக உலகெங்கும் குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஏழை நாடுகளான சூடான், சியர்ரா லியோன், கோமோரோஸ் (Sudan, Sierra Leone and the Comoros) என பலமுறை கால்பதித்துள்ளார்.

இதுபோன்ற ஆப்பிரிக்க நாடுகளில் சிகிச்சை முகாம்கள் நடத்தும் போது தினமும் 12 மணிநேரமும் இவரும் இவரது மருத்துவக் குழுவினரும் அம்மக்களின் நன்மையை கருதி ஈடுபடுவார்களாம். தற்போது கூட சவுதி அரசின் ஒரு மருத்துவ முகாமை சவுதியின் தென்புற நகரான பிஷாவில் நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தப் பகுதியின் சுற்றுவட்டார மக்களுக்கு அருகில் இதுபோன்ற சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனை ஏதும் கிடையாது என்பதும் கவனிக்கத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...