.

Pages

Sunday, November 11, 2018

வல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ. 34.51 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில்,மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (11.11.2018) பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர், வேளாண்மைத்துறை அமைச்சர் பேசியதாவது: -
வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் பரப்பளவு 7.60 சதுர கிலோ மீட்டர் ஆகும்.  2018 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொகையான 17,900க்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பேரூரட்சியில் தற்போது கழிவு நீர் தொட்டி (செப்டிடேங்) வசதிகள் மட்டுமே உள்ளது.  இப்பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.34.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வல்லம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. கழிவு நீர் உற்பத்தி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 115 லிட்டர் என்ற அளவை அடிப்படையாகக் கொண்டு, பேரூராட்சியின் 15 வார்டுகளை உள்ளடக்கி திட்டம் வடிவமைக்கப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட கழிவுநீர் உற்பத்தி அளவுகள் முறையே நாளொன்றுக்கு 2.35 மில்லியன் லிட்டர் மற்றும் 2.62 மில்லியன் லிட்டர் என்று கணக்கிடப்பட்டு, இடைகால அளவான நாளொன்றுக்கு 2.35 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தூண்டப்பட்ட சக்தி முறை தொழில் நுட்பம் (EASP Technology) அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வல்லம் பேரூராட்சி முழுவதும் ஏழு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் முதற்கட்டமாக (Phase-I) 1,4,6 மற்றும் 7 மண்டலங்களில் மேற்கண்ட பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.   இத்திட்டத்தின் படி கழிவு நீர்க் குழாய்கள் மொத்தம் 27,675 மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்பட்டு, 1056 ஆள் நுழைவு குழிகள் அமைக்கப்பட உள்ளது.  மேலும், 3787 வீட்டு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.  இத்துடன் மூன்று கழிவு நீர் உந்து நிலையம் மற்றும் பிரதான கழிவு நீர் உந்து நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தினால் வல்லம் பேரூராட்சியில் உள்ள சுமார் 3,787 குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 15,402 மக்கள் பயன் அடைவர் என இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியதலைவர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதாராணி ரவிச்சந்தரன், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், வல்லம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங் ஜெகதீசன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விஸ்வநாதன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருணகிரி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.