.

Pages

Monday, November 12, 2018

சவுதியில் அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

அதிரை நியூஸ்: நவ.12
நவம்பர் 23 அன்று அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டியின் நிறுவனர் ஸர் சையத் அஹமது கான் அவர்களின் 201 ஆம் பிறந்த தினம். ஸர் சையது அஹமது கான் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது இதன் நோக்கமல்ல மாறாக இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தில் அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழகம் எனும் பேராலயத்தை கட்டியெழுப்பிய மாபெரும் கல்வித்தந்தை என்ற அடிப்படையிலேயே நினைவு கூறப்படவுள்ளார்.

சமூக சீர்திருத்தவாதியும் கல்வியாளருமாக சேவையாற்றிய பொழுது பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த நிலையிலும் ஆங்கிலேயர்களிடம் பயனடைந்த ஒரு சிறிய பிரிவினரைப் போல் முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் ஆங்கிலக் கல்வியையும் கற்றுத் தேர்ந்து முன்னேற வேண்டும் என நல்லெண்ணம் கொண்டு இந்த பல்கலைக்கழகத்தை அவர் உருவாக்கினார்.

தன் சொந்த சமூகம் உள்ளிட்ட அவர் சந்தித்த பன்முனை எதிர்ப்புகள் சுமார் 200 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீர்த்துப்போகாமல் காவி வடிவில் இந்த கல்வி ஜோதியை அணைத்திட பல்வேறு தொடர் இடையூறுகளை இன்றும் ஏற்படுத்திக் கொண்டேயுள்ளது.

அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டியின் ஸ்தாபகரான ஸர் சையது அஹமது கான் அவர்களின் கல்வி மற்றும் சமூக சேவைகளை நினைவுகூர்ந்திடும் வகையில் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதியன்று ஜித்தாவிலுள்ள அலிகார்க் முஸ்லீம் யூனிவர்ஸிட்டியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து ஜித்தா கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியின் விருந்தினராக ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் நூர் ரஹ்மான் ஷேக் அவர்களும், அலிகார்க் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் ஜோத்பூரில் இயங்கும் மவுலானா ஆசாத் பல்கலைக்கழகத்தின் இன்னாள் தலைவருமான அக்தாருல் வாஸி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டாயம் முன்பதிவு செய்து அதன் அழைப்பிதழ்களை கொண்டு வருவோர் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர். அனுமதி அட்டை மற்றும் அழைப்பிதழ்களுக்கு முன்பதிவு செய்திட கீழ்க்காணும் நபர்களை தொடர்பு கொள்ளவும்.

Entry is through invitation/entry cards, which can be obtained by contacting the following executive committee members: 
Athar Rasool (053 366 5946),‬ Ateeq Siddiqui (055 334 4124‬‬), Asim Zeeshan (050 244 1387), Shams Tabrez (055 635 6993), Ghufran Nishter (056 790 5778‬‬‬), Rabnawaz Khan (053 189 0644) and Mohammed Zaki (05 41887441)

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.