.

Pages

Saturday, November 3, 2018

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி ~ ஒரு நேரடி விசிட் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ. 03
ஷார்ஜாவில் 37-வது ஆண்டாக நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக தமிழ் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து நேற்று ஷார்ஜா எக்ஸ்போ சென்டருக்கு சக நண்பர்கள், புத்தக ஆர்வலர்களுடன்  நேரடியாக செல்லும்  வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளிக்கிழமை (நவ.02) ஷார்ஜா அரசின் சிறப்பு அழைப்பாளராக திருமதி. கனிமொழி எம்.பி அவர்களும் கலந்து கொண்டு மாலை 6 மணிமுதல் 8 மணிவரை எக்ஸ்போ சென்டர் பால்ரூம் (Ball Room Hall) அரங்கில் (கட்சிக்காரர்கள் உட்பட) தமிழ் மக்களை சந்தித்து உரையாடியதுடன் புத்தக காட்சி அரங்கிற்கும் வருகை தந்து அரங்கங்களை பார்வையிட்டார்.

எக்ஸ்போ சென்டர் ஹால் 6 இல் இந்தியர்களுக்கான புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான ஸ்டால்கள் மலையாள புத்தக ஸ்டால்களாவே உள்ளன என்றாலும் குடும்பத்துடன் பெருமளவில் கலந்து கொண்டதும், புத்தகங்களை வாங்கியது அவர்களே. மலையாளிகள் சார்பாக 2 Live FM ரேடியோ ஸ்டேஷன்கள், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கள், பேட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான நேரலை தொலைக்காட்சி போட்டிகள், பிரபல எழுத்தாளர்களே நேரில் வருகை தந்திருந்து அவர்கள் எழுதிய புத்தகங்களை வாங்குவோருக்கு ஆட்டோகிராப் வழங்குவது என அரங்கையே பரபரப்பாக வைத்திருந்தனர்.

நமது தமிழ் புத்தகங்கள் DC Books எனும் மலையாள பதிப்பகத்தின் ஓர் அங்கமாக பலவகையான புத்தக கலெக்ஷன்களுடன் செயல்படுகின்றது. அதேபோல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகமும் ஒரு சிறிய ஸ்டாலை தமிழுக்காக தனியாக அமைத்துள்ளது. மேலும் இந்தியாவில் சிறந்த புத்தகங்களை வருடந்தோறும் விருது வழங்கி கவுரவப்படுத்தும் சாகித்ய அகாடமி எனும் நிறுவனமும் பல மொழிகளில் வெளியான தனது சொந்த வெளியீடுகளை விற்பனைக்கு வைத்துள்ளது. அதில் பரிசுகளை வென்ற பல தமிழ் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

சுருக்கமாக பாபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தை (Booksellers Association & Publishers Association of South India - Bapasi)) சேர்ந்த சுமார் 30 பதிப்பகங்கள் ஒன்றிணைந்து முதன்முறையாக கேரளாவின் DC Books பதிப்பகத்துடன் இணைந்து அமைத்துள்ள ஸ்டாலில் ஏராளமான பொது தலைப்பிலான புத்தகங்களுடன் பல இஸ்லாமிய புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். வாய்ப்புள்ளோர் கலந்து கொண்டு தமிழுக்கு ஆதரவு தருவதன் மூலம் பதிப்பகத்தினர் வரும் ஆண்டுகளிலும் ஆர்வத்துடன் தங்களின் ஸ்டால்களை விரிவுபடுத்த ஏதுவாகும்.

செய்தி மற்றும் படங்கள்: 
அதிரை அமீன்

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.