.

Pages

Tuesday, November 6, 2018

அதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.06
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதன் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்து, குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை மட்டும் முழுமையாக நம்பியுள்ள அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதிக்கு ஆற்று நீர் நிரப்பக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்தை நேரில் சந்தித்து முறையிட்டும், தண்ணீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதம் குறித்தும், அதிராம்பட்டினம் பேரூராட்சி குடிநீர் தேவைக்காக தொக்காலிக்காடு மகாராஜா சமூத்திர அணைக்கட்டு நீரோடையிலிருந்து வெளியேறும் உபரி நீரை பம்பிங் மூலம் ஊரணிகளுக்கு இறைத்துக்கொள்ளும் திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார்.

முடிவில், அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதிக்கு ஆற்றுநீர் திறந்து விடுவதில் தொடர்ந்து புறக்கணிக்கும் கல்லணை கால்வாய் உட்கோட்ட பொதுப்பணித்துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், மஹல்லா ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் சார்பில், எதிர்வரும் (14-11-2018) அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் (அதிரை பேரூராட்சி அலுவலகம் அருகில்) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் நிதிநிலை அறிக்கை வாசித்து முடிவில் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், 150 க்கும் மேற்பட்ட நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
 

5 comments:

 1. முதலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி MLA அவர்களை சந்தித்து அதிராம்பட்டினம் குலங்களின் நிலமையை எடுத்து சொல்லவும்.அப்படி முன்பு சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அதிராம்பட்டினம் நிலத்தடி நீர் ப்ற்றிய செய்தியை அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை வைக்கலாம்

  ReplyDelete
 2. Road block is verify good solution for this. Because of more village people were victory using this road block. But one more thing do not cancel this road block program Do this Allah will give victory!

  ReplyDelete
 3. இது வரை ஒரு முறை கூட யேன் M L A மந்திரி மார்கலை பார்க வில்லை அதன் மர்மம் யென்ன.

  ReplyDelete
 4. MLAவை பார்க்காத மர்மம் என்ன
  உங்களின் கட்சி மோட்டிவேசன்களை விட்டு விட்டு முறையாக MLAவை சந்தித்து உங்களின் மனுவை கொடுத்து பதில் வரவில்லை என்றால் அடுத்து கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்மே தவிர எதற்கு எடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்தால் வரவேண்டிய தண்ணீரும் வாராமல் போய் விடும்

  எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்களையும் உறுப்பினராக போட்டு முறையாக சென்று MLA-வை சந்திப்பதே முறை

  அரசியலில் பக்குவம் பெராதவர்களின் செயலாகவே தெரிகின்றன

  இதை வைத்து அரசியல் லாபம் அடைய முயற்சியே

  ReplyDelete
  Replies
  1. Adiraiyan அருமையான கருத்துகலை முன் வைதுல்லார் இதைபோல் ஆக்கபுர்வமான கருத்துகளை அனைவரும் பதியவும்

   Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.