Pages

Saturday, November 3, 2018

அமீரகத்திற்குள் சாதாரண மருந்து மாத்திரைகளை எடுத்து வர முன் அனுமதி தேவையில்லை!

அதிரை நியூஸ்: நவ.03
அமீரகத்திற்குள் சாதாரண மருந்து மாத்திரைகளை எடுத்து வர முன் அனுமதி தேவையில்லை

அமீரகத்திற்குள் மருந்து மாத்திரைகளை எடுத்து வருவதற்கு ஆன்லைன் வழியாக முன் அனுமதி பெறவேண்டும் என கடந்த வாரம் உத்தரவு வெளியாகியிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கூடுதல் விளக்கங்களை கேட்டதையடுத்து சுகாதாரம் மற்றும் நோய் வருமுன் காப்பிற்கான அமைச்சகம் (The Ministry of Health & Prevention) விளக்கமளித்துள்ளது.

அமைச்சகத்தின் விளக்கத்தின்படி, போதைப்பொருள் சார்ந்த, மனோவியல் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள மருந்துகளை தவிர்த்து நோயாளிகள் அன்றாடம் பாவிக்கும் சாதாரண மருந்துகளை எடுத்து வர எந்த கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The ministry has now clarified that this only applies to narcotic-based, psychotropic and controlled medicines and is not mandatory for regular medicines.

மேலும் அமீரகத்தில் தடை விதிக்கப்பட்ட சில பொருட்களை கலந்துள்ள மருந்துகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் கலந்துள்ள மூலிகை மருந்துகள், அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ள மருத்துவக் கருவிகள் போன்றவற்றை கொண்டு வருவதற்கும், சர்வதேச போதைப்பொருள் தடுப்பு முகமையால் தடை செய்யப்பட்ட மருந்துகள், அமீரக போதை தடுப்பு மையத்தால் போதைப் பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ளவைகள் மட்டுமே ஆன்லைன் வழியாக முன்அனுமதி பெற வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

The banned list also contains medicines that are not registered in the UAE, herbal medicines that might contain some banned substances, medical devices that might contain banned medication and medicines that have been discontinued in the UAE. 

These must not contain any of the substances mentioned in the International Control Drugs conventions or on the list of Controlled registered medicines mentioned in the ministry’s controlled drug annexure.

அதேவேளை சாதாரண மருந்துகளை கொண்டு வருவோர் டாக்டரின் மருத்துவ பரிந்துரை, ஏன் அந்த நோயாளி அந்த மருந்தை எடுத்துக் கொள்கிறார் என்பதற்கான விளக்கம் மற்றும் கொண்டு வரும் மருந்துகள் 3 மாத தேவைக்கும் மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Residents and tourists to UAE can carry their POMs without having to seek prior approval, provided they fulfil three prerequisites. These include a doctor’s prescription, a medical report that explains why the individual requires the medication and the quantity of medication is restricted to a duration of not more than three months. 

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...