Pages

Saturday, December 8, 2018

கஜா புயலுக்குப் பின் நடந்த மருத்துவ முகாம்களில் 1.14 லட்சம் பேருக்கு சிகிச்சை!

தஞ்சாவூர் டிச.08-
கஜா புயலுக்குப் பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 1இலட்சத்து 14 ஆயிரத்து 464 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஐ.ரவீந்திரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில், புயலுக்கு பின்னர் உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஐ.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது,

இயக்குநர் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை உத்தரவின் பேரிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரிலும், இணை இயக்குநர் டாக்டர் சகாயமேரி ரீட்டா ஆலோசனையின் பேரிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் 46 மருத்துவ குழுவினர் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதித்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவசத்திரம், திருவோணம் ஆகிய 6 வட்டங்களில் உள்ள 36 ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் 123 துணை சுகாதார நிலையங்களில், மின் சாதனங்கள் வரவழைக்கப்பட்டு, மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புயல் பாதிப்பு ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டதும், ஒரே வாரத்தில் 33 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 5 கே.வி. ஜெனரேட்டர் வழங்கப்பட்டது.

மேலும் தலா 4 பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3 மாவட்டத்தில் இருந்து தொழுநோய் தடுப்பு அலுவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு 3 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. புயல் பாதிக்காத மற்ற பகுதிகளிலும் தொற்றுநோய் பரவாமல் கண்காணிப்பு பணி நடக்கிறது.

புயல் பாதிப்புக்கு பிறகு இதுவரை நடத்தப்பட்ட 2 ஆயிரத்து 74 மருத்துவ முகாம்கள் மூலம் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 464 பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் சீரமைப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து 31 க்கும் மேற்பட்ட மண்டபங்களில் தங்கியுள்ள மின்வாரிய பணியாளர்களுக்கு, தடுப்பூசி, மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குளோரினேசன் செய்யப்பட்ட குடிதண்ணீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

ஆய்வின்போது மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் எம்.எட்வின், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக், உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சவுந்தரராஜன், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுச்சாமி, பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...