.

Pages

Sunday, December 16, 2018

118 வயது முன்னாள் சவுதி ராணுவ வீரர் மறைந்தார்!

அதிரை நியூஸ்: டிச.16
சவுதி அரேபியா என ஒன்றுபட்டதொரு தேசம் உருவாகுமுன் ஹெஜாஸ் மற்றும் நஜ்து என இரு தனித்தனி தேசங்களாக இருந்தன. இன்றைய மக்கா, மதீனா, ஜித்தா, யான்பு, தபூக், சிரியாவின் ஒரு சிறு பகுதி மற்றும் ஏமனின் ஒரு சிறு பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் அன்றைய ஓட்டோமான் (துருக்கி) பேரரசால் ஆளப்பட்டு வந்தது. இந்த பகுதிகளை ஆளுவதற்கென மக்காவை தலைமையகமாக கொண்டு 'ஷரீஃப்' என்ற தகுதியில் பிரதிநிதியாக ஒருவர் இருந்து இப்பகுதிகளை ஆள்வார். இதைத் தவிர நஜ்து அரசின் மேலாண்மையை ஏற்ற தனி பழங்குடி சிற்றரசுகளாக அல் ஹஸா, கத்தீப் உள்ளிட்ட பகுதிகள் விளங்கின.

அன்றைய நஜ்து அரசர் அப்துல் அஜீஸ் பின் சவுது அவர்கள் துருக்கியிடமிருந்து போரிட்டு வென்று ஹெஜாஸ் பகுதிகளையும் பின்பு அல் ஹஸா உள்ளிட்ட தன்னாட்சி பகுதிகளையும் ஒன்றிணைத்து இன்று நாம் காணும் சவுதி அரேபியா என்ற ஒற்றை தேசமாக உருவாக்கினார். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி சவுதி அரேபியாவாக உருவெடுத்த நாளே சவுதியின் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகின்றது. சவுதி அரேபியா கடந்த சில மாதங்களுக்கு முன் 88வது தேசிய தினத்தை கொண்டாடியது நினைவிருக்கலாம்.

மன்னர் அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் ஓட்டோமான் துருக்கியர்களை 'அசீர்' பகுதியிலிருந்தே மொத்தமாக விரட்ட 1934 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1352) 'பாகிம்' என்ற இடத்தில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றது. இதில் ஒரு ராணுவ வீரராக இணைந்தவர் தான் 'ஸயீத் பின் மொஹி பின் அஹமது அல் அஹமது அல் கஹ்தானி' அவர்கள். அப்ஹா பிரதேசத்திலிருந்து அப்போது ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 3 போர் வீரர்களில் ஒருவர். இவரது முக்கிய வேலை போர் முனையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டு சேர்ப்பது.

ஸயீத் பின் மொஹி அவர்கள் இறக்கும் வரையில் மிகுந்த நினைவாற்றலுடன் இருந்துள்ளார். இவருக்கு 75 வயதில் முஹமது, 65 வயதில் அலி என்ற இருமகன்கள் இன்னும் ஹயாத்துடன் உள்ளனர். கடந்த சவுதி தேசிய தினத்தின் போது 'அல் வத்தன்' எனும் அரபு பத்திரிக்கை ஒரு முழு பக்கத்தையே ஒதுக்கி அன்னாரது பேட்டியை பிரசுரித்து கண்ணியப்படுத்தியிருந்தது. ஸயீத் பின் மொஹி அவர்களின் அடையாள அட்டையில் அவரது பிறந்த ஆண்டு 1909 (ஹிஜ்ரி 1327) என குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும் தான் அதற்கு முன்பே பிறந்தவன் என வாதிட்டுவந்தார்கள்.

ஸயீத் பின் மொஹி பின் அஹமது அல் கஹ்தானி அவர்கள் கடந்த வாரம் 11.12.2018 அன்று அப்ஹா பிரதேசத்தின் உஹூத் ருபைதா கவர்னரேட்டுக்கு உட்பட்ட அல் ஒம்ரான் எனும் கிராமத்தில் இயற்கை எய்தினார்கள். அன்னார் அவர்களே ஹெஜாஸ் மற்றும் நஜ்து என தனித்தனி நாடுகளாக இருந்து ஒற்றை சவுதி அரேபியாவாக மாறிய வரலாற்றை கண்ணாறக் கண்டவர்களில், 1934 ஆம் ஆண்டு போரில் கலந்து கொண்டு நீண்ட காலம் உயிருடன் இருந்த ஒரே ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.