Pages

Thursday, December 6, 2018

டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ரூ.1.25 லட்சம் நிதியுதவி!

அதிரை நியூஸ்: டிச.06
கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஒன்னேகால் இலட்சம் இந்திய ரூபாயை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் நிதியுதவியாக வழங்கியது.

இதுகுறித்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திடம் குவைத் வாழ் தமிழர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் அள்ளி வழங்கிய நிதியுதவியை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும், சென்னைப் பல்கலைக்ககழக அரபித்துறை பேராசிரியருமான மவ்லவீ முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ அவர்களிடம் சங்கத்தின் தமிழக பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.

நம் குவைத் வாழ் தமிழ் சகோதரர்களின் கொடையுள்ளம் பார்போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த சகோதர, சகோதரிகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இவர்கள் அனைவருக்கும், இனியும் உதவிகளை வழங்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் அருளாளன் அல்லாஹ் வளமான வாழ்க்கையை இம்மையிலும், சுகந்த சுவனத்தை மறுமையிலும் அருளி, பிரதிபலன் வழங்குவானாக! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...