Pages

Tuesday, December 11, 2018

துபையில் 13 வகையான விடுமுறைகளுக்கு 2019 ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிரை நியூஸ்: டிச.11
துபையில் அரசு ஊழியர்கள் 13 வகையான விடுமுறைகளுக்கு 2019 ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம்

நமது பள்ளி மாணவர்கள் 'As i am suffering from fever' என்றும், அலுவலகம் செல்வோர் 'பாட்டி செத்துப் போயிட்டாங்க' என்றும் லீடு எடுப்பதையே பார்த்தும் கேட்டும் வந்த நமக்கு துபை அரசு ஊழியர்கள் 13 வகையான வீடுமுறைகளை எடுக்கலாம் என சலுகை வழங்கியுள்ளது ஆச்சரியபடுத்துகின்றது.

துபை அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கீழ்க்காணும் பட்டியலில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஊழியர் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பம் வழங்கிய 10 நாட்களுக்குள் அதுகுறித்து முடிவெடுத்து அறிவித்திருக்க வேண்டும், முடிவெடுக்காமல் 10 நாட்களை கடந்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும்.

விடுமுறை இனங்களின் பட்டியல்:
1. ஆண்டு விடுமுறை - Annual leave
2. உடல்நிலை சுகமில்லாததற்கான விடுப்பு - Sick leave
3. மகப்பேறு விடுப்பு - Maternity leave
4. குழந்தைகளுக்காக எடுக்கும் விடுப்பு - Paternity leave
5. துக்க விடுப்பு - Mourning leave
6. மரணம் மற்றும் அது தொடர்புடைய விடுப்புக்கள் - Leave for death-related events
7. ஹஜ் செல்ல விடுமுறை - Haj vacation
8. நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கான விடுப்பு - Participation in events
9. நோயாளிகளுக்கு துணையாக செல்வதற்கான விடுப்பு - Accompanying sick leave
10. துணைவருக்கு உதவுவதற்கான விடுப்பு - Leave for partner,
11. படிப்பதற்கான விடுப்பு - Study leave
12. சம்பளமில்லா விடுப்பு -Leave without pay
13. தேசிய சேவை மற்றும் இருப்பிலுள்ள விடுப்புக்கள் - Leave without pay

இதுபோல் துபை அரசு ஊழியர்களின் வருடாந்திர விடுமுறை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிரேடு 12 மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்கள் 30 நாட்களும், கிரேடு 4 முதல் 11 வரையுள்ள ஊழியர்கள் 25 நாட்களும், கிரேடு 3 மற்றும் அதற்கு கீழுள்ள ஊழியர்கள் 18 நாட்களும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...