தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் இரண்டு பச்சிளங்குழந்தைகளை தொண்டு நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (10.12.2018) ஒப்படைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், மானம்புச்சாவடி சுடர் மருத்துவமனை அருகில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மூலம் கண்டெடுக்கப்பட்ட பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை 16.11.2018 அன்று இராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, இக்குழந்தையினை தற்காலிக பராமரிப்பு மற்றும் தத்து வழங்குவதற்காக மதுரை மாவட்டம், கிரேஸ் கென்னட் பவுண்டேசன் என்ற தத்து நிறுவனத்திடமும், தஞ்சாவூர் மாவட்டம், இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை இராசா மிராசுதார் மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டத்தில் கீழ் சேர்க்கப்பட்டு, இக்குழந்தையினை தற்காலிக பராமரிப்பு மற்றும் தத்து வழங்குவதற்காக அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா குழந்தைகள் இல்லம் என்ற தத்து நிறுவனத்திடமும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வின் போது குழந்தை நலக்குழு தலைவர் திலகவதி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர்கள் அசோக் மற்றும ரஞ்சித் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.