.

Pages

Thursday, December 27, 2018

அமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கணவருக்கு 2 லட்சம் திர்ஹம் அபராதம்!

அதிரை நியூஸ்: டிச.27
அமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கணவர் கோர்ட் உத்தரவுப்படி 2 லட்சம் திர்ஹம் ரத்த ஈட்டுப்பணம் கட்டி விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை இரவு ஷார்ஜாவில் 'கணவர் நல்ல இருக்க வேண்டும்' என வேண்டி அவர்தம் மனைவியர்களால் நடத்தப்பட்ட 'தனுமசா திருவாதிரா' எனும் கேரளத்து இந்து கலாச்சாரச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு நள்ளிரவு 1.45 மணியளவில் (ஞாயிறு) ராஸ் அல் கைமா திரும்பிக் கொண்டிருந்தார்கள் பிரவீன், அவர் மனைவி திவ்யா மற்றும் அவர்களின் 2 வயது குழந்தை தக் ஷ் (Daksh) ஆகியோர் காரை ஓட்டி வந்த பிரவீன் உடல் களைப்பால் சற்றே கண்ணயர, கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய கார் ரோட்டோரம் இருந்த மின் விளக்கு கம்பத்தில் மோதியதில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அவரது மனைவி திவ்யா உயிரிழந்தார். பிரவீனும் பின் இருக்கையிலிருந்த குழந்தை தக்க்ஷூம் (Daksh) காயங்களின்றி உயிர் தப்பினர்.

நேற்று புதன்கிழமையன்று இந்த விபத்து தொடர்பான வழக்கு ராஸ் அல் கைமா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 'பொறுப்பற்ற முறையில்' வாகனத்தை ஒட்டிவந்த கணவரே தன் மனைவியின் இறப்புக்கு காரணம் என தீர்ப்பளிக்கப்பட்டதுடன் 2 லட்சம் திர்ஹத்தை இரத்த ஈட்டுப்பணமாக அவர் மனைவியின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் மின்விளக்கு கம்பத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கூடுதலாக 2,500 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டார்.

உத்தரவை தொடர்ந்து பிரவீன் ராஸ் அல் கைமா போலீஸ் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரவீனுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 3 மணிநேரத்தில் இந்த இரத்த ஈட்டுப்பணத்தை திரட்டி நீதிமன்றத்தில் கட்டியதை தொடர்ந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

விடுதலையை தொடர்ந்து தன் மனைவியின் உடல் மற்றும் குழந்தையுடன் 'இறுதிச் சடங்குகளை' மேற்கொள்ளுவதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபையிலிருந்து காலிகட் விமானம் நிலையம் வழியாக சொந்த ஊரான பாலக்காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

பிரவீன் மீண்டும் அமீரகம் திரும்பிய பின் சட்டப்பூர்வ கடமைகளை முடித்து அதன் ஆவணங்களை சமர்ப்பித்தால் இன்ஷூரன்ஸ் மூலம் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ராஸ் அல் கைமாவில் இயங்கும் இந்தியன் ரிலீஃப் கமிட்டியின் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான புஷ்பன் கோவிந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

Source: Gulf News & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.