Pages

Sunday, December 16, 2018

புயலில் சாய்ந்த தென்னைகளுக்கு பட்டுக்கோட்டையில் 30-ம் நாள் நினைவுப் பேரணி (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.16
பட்டுக்கோட்டையில் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதை, பட்டுக்கோட்டை டெல்டா இளைஞர் எழுச்சி இயக்கம், டெல்டா காக்கும் கரங்கள் மற்றும் இந்திராகாந்தி யூத் பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. ஊர்வலத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. மகேந்திரன் தலைமை வகித்தார். பண்ணைவயல் ஊராட்சி முன்னாள் தலைவர் சு. ராஜாத்தம்பி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில், ந. மணிமுத்து, வா. வீரசேனன் (திமுக), அ. வைரக்கண்ணு (காங்கிரஸ்), எம். செந்தில்குமார் (மதிமுக) சி.நா. சக்கரவர்த்தி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), அணைக்காடு முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர், வெவ்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஆதி. மதனகோபால், சதா.சிவக்குமார் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் பிள்ளைகள் கட்ட வேண்டிய பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே செலுத்த வேண்டும்.

விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றி, மறு உற்பத்தி செய்யத் தேவையான தென்னங்கன்றுகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் 2 மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் முழக்கமிட்டுச் சென்றனர்.

காசாங்குளம் வடகரை அண்ணா அரங்கில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அண்ணா அரங்கை வந்தடைந்ததும் அங்கு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட தென்னை மரங்களுக்கு இயற்கை எய்திய மனிதர்களுக்கு செய்வதைப்போல கூடியிருந்த ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது அஞ்சலி செலுத்தினர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...