Pages

Wednesday, December 5, 2018

அதிரையில் கூரை வீடுகள் சீரமைப்பு பணிக்காக 5 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

அதிராம்பட்டினம், டிச.05
கஜா புயலில் அதிரையில் பாதிப்படைந்த கூரை வீடுகளை மறு சீரமைப்பது தொடர்பாக, அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்தார்கள், சமுதாய அமைப்புகள், நற்பணி சங்க நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம், அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (டிச.03) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், புனரமைப்புக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, புனரமைப்புக் குழு சார்பில், அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலையில், அதன் அலுவலகத்தில் நேற்று செவ்வாய் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிரையில் கூரை வீடுகள் சீரமைப்பு பணிக்காக 5 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில், தலைவராக எம்.ஓ செய்யது முகமது புகாரி (தமுமுக), துணைத் தலைவராக இசட். முகமது இலியாஸ் (எஸ்.டி.பி.ஐ), செயலராக பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் (அல் அமீன் ஜாமிஆ பள்ளி), இணைச்செயளராக ஏ.ஜெ ஜியாவுதீன் (நாம் தமிழர்),பொருளாளராக எம்.எஸ்.எம் முகமது யூசுப் (அதிரை மேம்பாட்டுச் சங்கமம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...