Pages

Saturday, December 8, 2018

ஜப்பானில் வெளிநாட்டவர்களை 5 வருட விசாவில் வேலைக்கு அமர்த்தும் திட்டம் நிறைவேற்றம்!

அதிரை நியூஸ்: டிச.08
ஜப்பானில் திறமைவாய்ந்த வெளிநாட்டவர்களை 5 வருட விசாவில் வேலைக்கு அமர்த்தும் திட்டம் நிறைவேறியது

ஜப்பான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே ஜப்பானில் நிலவும் கடுமையான தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக சுமார் 345,000 வெளிநாட்டு தொழிலாளர்களை 5 வருட வேலைவாய்ப்பு விசாவில் அனுமதிக்கும் திட்டம் நிறைவேறியது. இந்த புதிய திட்டத்தின் கீழ் திறன்மிக்க உழைப்பாளர்கள் கட்டுமானம், உணவுசார் சேவைகள், மருத்துவ உதவிக்குழு மற்றும் சில குறிப்பிட்ட துறைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த விசா நடைமுறைகள் எதிர்வரும் 2019 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த 5 வருட வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்கள் தங்களுடன் குடும்பத்தினரை அழைத்து வர அனுமதியில்லை என்றாலும் 5 வருட காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு இதே விசாவை காலவரம்பற்ற வகையில் நீட்டித்துத் தரவும், குடும்பத்தை கூட்டி வந்து ஜப்பானில் தொடர்ந்து வாழவும் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிகின்றது எனினும் இந்த சட்டம் இறுதி வடிவம் பெற்ற பின்னரே அறுதியிட்டு எதையும் கூற முடியும். எனினும் 5 வருடத்திற்குப் பின் விசா நீட்டிப்பு பெற கல்வித்தகுதியுடன் ஜப்பானிய மொழியறிவுத் தேர்வும் நடத்தப்படும்.

அதேவேளை ஜப்பானிய எதிர்க்கட்சியினர் இந்தத் திட்டம் என்ன வகையான ஜப்பானிய சமூகம் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை சரியாக விளக்கவும், வெளிநாட்டு தொழிலாளர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றியும் விளக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியதுடன் இதற்குச்சான்றாக ஏற்கனவே அடிமட்ட தொழிலாளர்களாக வேலைபார்த்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ;தொழிற்நுட்ப பயிற்சித் திட்டம்' (Technical Training program) என்ற பெயரில் சுரண்டப்பட்டு வருவதையும், குறைந்த ஊதியத்திறகு சம்மதித்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையால் ஜப்பானிய தொழிலாளர்களும் தங்களுடைய ஊதியத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...