Pages

Sunday, December 2, 2018

அமீரகத்தின் 7 மிகப்பழமையான கட்டிடங்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.02
அபுதாபி - கஸ்ரு அல் ஹொஸன், இது 1761 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மீண்டும் 1976 - 1983 ஆன் ஆண்டுகளுக்கு இடையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இது புதுப்பிக்கப்பட்ட போது வெள்ளையடிக்கப்பட்டதால் வெள்ளைக்கோட்டை எனவும் பழைய கோட்டை என அழைக்கப்படும் இந்த கோட்டை ஆரம்பத்தில் கூம்பு வடிவ காவல்கோபுர அரணாக பயன்பட்டது.

துபை - அல் பஹிதி கோட்டை 1787 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1971 ஆம் வருடம் மியூஸியமாக மாற்றப்பட்டது. பர்துபை கிரீக் அருகே அமைந்துள்ள இந்த கோட்டையின் பெயரால் ஒரு மெட்ரோ ரயில் நிலயமும் அருகே செயல்படுகின்றது.

ஷார்ஜா - சூக் அல் அர்சாஹ், சுமார் 200 வருடங்களுக்கு முன்னிருந்தே இயங்கிவருகின்றது. இது அமீரகத்தின் மிகப் பழமையான சந்தையாக விளங்குவதுடன் பண்டைய நாட்களில் நாட்டுப்புற அரபியர்கள் தங்களுடைய ஒட்டகங்களுடன் கூடும் இடமாகவும் விளங்கி வந்தது.

அஜ்மான் - ரெட் போர்ட் எனப்படும் செங்கோட்டை 1910 - 1928 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அன்றைய ஆட்சியாளர் ஷேக் ஹுமைத் பின் அப்துல் அஜீஸ் அல் நுஐமீ அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது, இது 1986 ஆம் ஆண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

புஜைரா - புஜைரா கோட்டை என்றழைக்கப்படும் இந்த கோட்டை 1670 ஆம் ஆண்டு புஜைரா கடற்கரை அருகே கட்டப்பட்டு அன்றைய ஆட்சியாளர்களின் குடும்பத்திற்கும் எமிரேட்டிற்கும் காவல் அரணாக விளங்கியது. அன்றைய காலத்தில் எழுப்பப்பட்ட இதுவொன்றே கற்களால் கட்டப்பட்ட கட்டிடமென்பது குறிப்பிடத்தக்கது.

உம்மல் குவைன் - அல் அலி கோட்டை 1768 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர் ஷேக் ராஷித் பின் மாஜித் என்பரால் கட்டப்பட்டு 1969 ஆம் ஆண்டு வரை அரசின் தலைமையகமாகவும் பயன்பட்டு வந்தது.

ராஸ் அல் கைமா - தயாஹ் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டை மட்டுமே அமீரகர்தில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிருந்து பசுமையான பேரீத்த மர தோட்டங்களையும், அழகிய கடலையும் மலைத் தொடர்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...