Pages

Friday, December 7, 2018

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி அதிராம்பட்டினத்தில் ATJ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.07
கஜா புயலில் பாதிப்படைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (ATJ) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் துணைத்தலைவர் ஏ.எம் சிக்கந்தர் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTJ) ஒருங்கிணைப்பாளர் முகவை இம்ரான் கலந்துகொண்டு பேசியது;
'கஜா புயலில் பாதிக்கப்படோருக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. இவற்றை அதிகரித்து உடனடியாக வழங்க வேண்டும். பாதிப்படைந்த தென்னை மரம் ஒன்றிற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரமாக வழங்க வேண்டும். மேலும், பாதிப்படைந்த மீனவர்கள், இன்ன பிற தொழில் துறையினருக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில்,
1. கஜா புயலில் பாதிப்படைந்த அனைத்து கிராமங்களுக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் நேரில் சென்று பாதிப்புகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.

2. புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். நெல், கரும்பு, வாழை, இதர பயிர்கள், மரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாதிப்புகளுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

3. புயலில் முறிந்து விழுந்து கிடக்கும் தென்னை மற்றும் இதர மரங்களை அகற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. இன்னும் மின்சாரம் வழங்காமல் இருக்கும் கிராமப் பகுதிகளுக்கு உடனடி மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5. கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளின் தற்போதைய மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

6. வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்யவேண்டும்.

7. சேதமடைந்த மீனவர்களின் வலை, படகுகளுக்கு உரிய முறையில் கணக்கீடு செய்து நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். வேலையிழந்த மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

8. முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்த குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மாடி வீடுகள் உட்பட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

9. புயலில் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

10. புயலில் பாதிப்படைந்த டெல்டா மாவட்ட பகுதிகளின் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.

11. புயலில் பாதிப்படைந்த டெல்டா மாவட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கையாக சுகாதார முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

12. டெல்டா பகுதிகளில் பழுதடைந்த சாலைகள், சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் சேக்தாவூது நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...