.

Pages

Monday, December 10, 2018

அமீரகம் உள்ளிட்ட அரபுநாடுகளில் மலையாளிகளுக்கு இலவச சட்ட உதவிக்குழுக்கள்!

கேரள முதல்வர் துபை வந்தபோது காணத்திரண்ட கூட்டம்
அதிரை நியூஸ்: டிச.10
கேரள அரசு சார்பாக மலையாளிகளுக்கு அமீரகம் மற்றும் அரபுநாடுகளில் இலவச சட்ட உதவிக்குழுக்கள்

NRI என்று கேள்விப்பட்டிருப்பீங்க! NRE என்று கூட கேள்விப்பட்டிருப்பீங்க!! ஆனால் NRK (Non Residents of Kerala) என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? இந்திய அரசாங்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை ஒரு மாநில அரசான கேரள அரசே தன்னுடைய வெளிநாடுவாழ் NRK மக்களுக்காக செய்வதால் அப்படி அவர்கள் தங்களைத் தாங்களே என அழைத்துக் கொள்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை!

அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் பணிபுரியும் கேரளவைச் சேர்ந்த மலையாளிகளுக்கு உதவுவதற்காக மலையாள வக்கீல்களை கொண்ட இலவச சட்ட உதவிக்குழுக்களை அமைக்கின்றது கேரள மாநில அரசு, இந்த சட்ட உதவிக்குழுவினர் அமீரகத்தில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வழக்குகளை எதிர் கொள்ளவும், நாடு திரும்பவும், பாதிக்கப்பட்டு நாடு திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்திடவும் உதவும்.

இந்த சட்ட ஆலோசணை உதவிகள் அனைத்தும் இந்திய தூதரகத்தின் துணையுடனேயே மேற்கொள்ளப்படும். இதற்கான ஏற்பாடுகளை கேரள அரசின் சார்பாக உருவாக்கப்பட்டு செயல்பட்டுவரும் Norka-Roots, a public sector undertaking under Non-Resident Keralites’ Affairs Department (Norka) of the Kerala government என்ற துறை மேற்கொண்டு வருகின்றது.

Norka-Roots துறையின் கீழ் இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்காக “Pravasi [Expat] Legal Aid Cell (PLAC)”  என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் நியமிக்கப்படும் வக்கீல்கள் நன்றாக மலையாளம் மற்றும் அரபி தெரிந்தவர்களாகவும், அந்தந்த அரபு நாடுகளின் சட்டங்களை தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கின் தன்மையையும் பாதிக்கப்பட்டுள்ள மலையாளிகளின் முறைப்பாடுகளை தெளிவாக உள்வாங்கிக் கொள்ளவும் இயலும் என கேரள அரசு கருதுகின்றது.

சட்ட உதவிக்குழுவில் அமீரகம் மற்றும் சவுதியில் தலா 5 பேர் ஆரம்பமாக நியமிக்கப்படவுள்ளனர். இவர்களிடம் உதவி கேட்கும் மலையாளிகளின் பிரச்சனையையும் அவர்கள் மீதான நம்பகத்தன்மை, வழக்கிலுள்ள சட்டப் பிரச்சனைகளையும் முதலில் அலசி ஆராய்ந்த பின்னரே சம்பந்தப்பட்டவருக்கு சட்ட உதவிகள் செய்ய முன்வருவர். கிரிமினல் தொடர்புடைய வழக்குகளை ஏற்க மாட்டார்கள்.

மேலும் மலையாளிகளின் பாஸ்போர்ட், விசா, வேலைவாய்ப்பு, சம்பளம், வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அனுபவித்து வரும் சிறைவாசம், சிறைவாசிகளின் மருத்துவ உதவிக்கான கோரிக்கைகள் போன்றவற்றிலும் தங்களால் ஆன உதவிகளை அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டும், இந்திய தூதரகத்தின் உதவியுடனும் செய்யும்.

கேரள அரசு மலையாளிகளுக்காக Karunyam and Santhwana என்கிற மேலும் 2 திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் Karunyam என்ற திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களை விமானத்தில் கேரள கொண்டு செல்ல பொருளாதார வசதியின்றி தவிப்போருக்கு 50,000 ரூபாய் வரையும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இறந்த மலையாளிகளின் உடல்களை விமானம் மூலம் கேரள கொண்டு செல்வதற்காக 15,000 ரூபாய்கள் வரை திருப்பியளிக்கின்றது.

Santhwana என்ற திட்டத்தின் கீழ் துயரமான நிலையில் நாடு திரும்பும் மலையாளி அல்லது அவருடன் வெளிநாடுகளில் வசித்த குடும்ப உறுப்பினர்களுக்கு 4 வகையான நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. மருத்துவ உதவிகள், இறப்பு சார்ந்த தேவைகள், மீண்டும் வெளிநாடு திரும்ப இயலாத சூழலில் மகளின் திருமணத்திற்கான நிதி உதவி, உடல்ரீதியான பாதிப்புகளால் மாற்றுத் திறனாளியானவர்கள் மூட்டு சிகிச்சை, ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலி என இன்னும் பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் நிதி உதவிகள் வழங்கப்படும். இதற்காக 15 கோடி ரூபாய்களை கேரள மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து கேரள விமான நிலையங்களிலிருந்தும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு இறந்தவர்களின் உடல்கள் அல்லது நோயாளியாக வருபவர்களை இலவசமாக சுமந்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் சேவை துவக்கி நடத்தி வருவதுடன் இந்த மனிதாபிமான சேவையை ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இன்றி யாரும் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அரபுநாடு வாழ் தமிழர்களும் இதுபோன்ற வசதிகளை பெற வேண்டும் ஆதங்கத்துடன்...

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.