Pages

Thursday, December 13, 2018

அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடியை மருத்துவ இன்ஷூரன்ஸ் கார்டாக பயன்படுத்தலாம்!

அதிரை நியூஸ்: டிச.13
அமீரகத்தின் எமிரேட்ஸ் ஐடி தற்போது மருத்துவ இன்ஷூரன்ஸ் கார்டாகவும் பயன்படுகின்றது

அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) என அழைக்கப்படும் அடையாள அட்டைகள் அமீரக ரெஸிடென்டுகளின் தனிப்பட்ட தகவல்களின் பெட்டகமாகவும் (portable personal database) விளங்கி வருகின்றது. ஸ்மார்ட் அரசாங்கம் (Smart Government) எனும் அமீரக கனவின் ஒரு அங்கமான இந்த எமிரேட்ஸ் ஐடிக்களின் பயன்பாடு நாள்தோறும் பல்வேறு தளங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இது 'பல்நோக்கப் பரிவர்த்தனைகளுக்கான ஒரு மூல நிறுத்தமாகவும்' (One-stop source of multi-purpose transactions) கருதப்படுகின்றது.

எமிரேட்ஸ் ஐடிக்கள் தற்போது அமீரகத்தில் செயல்படும் 6 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் அதன் சொந்தக் இன்ஷூரன்ஸ் கார்டுகளுக்கு (Health Insurance Cards) மாற்றாக அங்கீகரிக்கப்பட்டு கடந்த திங்கள் (10.12.2018) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளதுடன் எஞ்சிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களையும் இணைக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எமிரேட்ஸ் ஐடிக்கள் ஏற்கனவே ஒரு சில வங்கிகளின் டெபிட் கார்டுகளாகவும் (Bank Debit Cards) அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் அரசு வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்கள் செலுத்தும் போதும், வாகனப் பதிவுகளின் போதும், போன், இன்டெர்நெட் கனெக்சன் பெரும் போதும், இவற்றிற்கெல்லாம் மேலாக விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டிற்கு பதிலாகவும் பயன்படுகின்றது (As well as being used for immigration clearance at the airport).விரைவில் இது டிரைவிங் லைசென்ஸ்களுக்கு மாற்றாக அறிவிக்கப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...