Pages

Saturday, December 8, 2018

அபுதாபியில் மாரத்தான் ஓட்டப்போட்டி ~ அதிராம்பட்டினம் வீரர் சாதனை (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அப்துல் லத்திப். இவரது மகன் முகமது (வயது 35) கடந்த 10 ஆண்டுகளாக அபுதாபி வங்கியொன்றில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அட்னாக் நிறுவனம் சார்பில் 42.195 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காகக் கொண்டு மாரத்தான் ஓட்டப்போட்டி அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், 30-40 வயதுக்கு உட்பட்ட பிரிவில், முகமது கலந்துகொண்டு 526-வது இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தினார்.

இதுகுறித்து முகமது நம்மிடம் கூறியது;
இது எனது முதல் மாரத்தான் போட்டி. கடந்த வாரம் கடும் கால் வலியால் அவதியுற்றேன். எனது நண்பர்கள் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். 42.195 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்வது பெரும் சவாலாக இருக்கும் என எண்ணினேன். எனினும் எனது விடா முயற்சியில் தொலை தூரத்தை இலகுவாக கடந்தேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. 

போட்டி ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்திற்கும், எனது சக பணியாளர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது நன்றி. இனிவரும் காலங்களில் மாரத்தான் ஓட்டப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்துவேன்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...