Pages

Saturday, December 15, 2018

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பட்டுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.15
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காத தமிழக அரசையும், தமிழகத்திற்கு பேரிடர் நிதி வழங்காத மத்திய அரசையும் கண்டித்து பட்டுக்கோட்டையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களுடைய பாதிப்பை முழுமையாக கணக்கீடு செய்து மீண்டும் தென்னை பயிரிட முழு மானியம் வழங்க வேண்டும். புயல் பாதிப்புக்குள்ளான நெல், வாழை, மா, பலா, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களுக்கும், புயலால் சேதமடைந்த கூரை, ஓட்டு வீடுகளுக்கும், மீனவர்களின் நாட்டுப் படகு, விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கிராமங்களுக்கு விரைவாக மின் விநியோகம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள சிறு விவசாயிகளிடம் விவசாய மற்றும் கல்விக் கடனை செலுத்துமாறு வங்கிகள் நெருக்கடி தரக்கூடாது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கா.அண்ணாதுரை, பேச்சாளர் ந.மணிமுத்து (திமுக), ஏ.ஆர்.எம். யோகானந்தம், ஆர்.கலைச்செல்வன் (காங்கிரஸ்), எம்.செந்தில்குமார், என்.நாராயணமூர்த்தி (மதிமுக), மு.அ.பாரதி, ஏ.எம்.மார்க்ஸ், எம்.எம்.சுதாகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), கோ.நீலமேகம், ஆர்.சி.பழனிவேலு, எஸ்.கந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்),  அகமது ஹாஜா (மனிநேய மக்கள் கட்சி), சக்கரவர்த்தி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி),  பெ.வீரையன் (திராவிடர் கழகம்) உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...