அதிராம்பட்டினம், டிச.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி கிராமத்தில் வாழும் ஒரு சாராருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகள் பாதிப்படைந்த பகுதிகளை பார்க்க வராததால் அதிருப்தி. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி கிராமம் நாகம்மாள் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த நாங்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தோம். சமீபத்தில் வீசிய கஜா புயலில் பெரும்பாலன வீடுகள் சேதமடைந்தது. கடல் நீரும் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்தது. இதனால் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறோம். அரசு சார்பில் அமைக்கப்பட்ட முகாம்களில் எங்களை தங்க அனுமதிப்பது இல்லை.
அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மீனவப் பகுதிகளுக்கு மட்டும் சென்று படகுகளையும், வலைகளையும் பார்த்தனர். ஆனால், சேதமடைந்த எங்கள் பகுதியின் குடிசைகளையோ, விவசாய நிலங்களையோ நேரில் வந்து பார்க்கவில்லை. வயல்களில் கடல் நீர் புகுந்துவிட்டது. அதில் இறால், மீன் செத்து மிதக்கின்றன.
கஜா புயலுக்கு பிறகு பல்வேறு அமைப்புகளிடமிருந்து எங்கள் பகுதிக்கு வருகின்ற நிவாரணப் பொருட்களை எங்கள் சமுதாய மக்களுக்கு வழங்குவதில்லை. ஒருசாராருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். ரஜினி, கமல், சீமான், தினகரன், மோடி ஆகியோர் சார்பில் வழங்கிய நிவாரணப்பொருட்கள் எங்கள் சமுதாய மக்களுக்கு வழங்கவில்லை. எங்கள் பகுதியை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்.
அரசு அலுவலர்கள் பாதிப்படைந்த எங்கள் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசைகளை இழந்து தவிக்கும் எங்கள் மக்களை முகாம்களில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். சேதமடைந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.