Pages

Tuesday, December 4, 2018

பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் பேரணி ~ ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.04
கஜா புயலால் சேதமடைந்த தென்னைக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு கோரி, பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஒருங்கிணைந்து திங்கள்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இங்குள்ள பேருந்து நிலையம் எதிரிலிருந்து புறப்பட்ட பேரணியை இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் தேசிய  நிர்வாகக் குழு  உறுப்பினர் ஆர். நல்லகண்ணு  தொடங்கி வைத்து, பேரணியில் நடந்து சென்றார். 

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பட்டுக்கோட்டை  கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்ததும் அங்கு தமிழ்நாடு தென்னை  விவசாயிகள் சங்கம், தஞ்சை மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள்  மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், அனைத்து  விவசாயிகள்  சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கஜா  புயலால் சேதமடைந்த தென்னை  மரம் 1-க்கு ரூ 20 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு, நெல், வாழை, இதர பயிர்கள், மரங்கள், மீனவர்களின் படகு, வலை  உள்ளிட்ட அனைத்துப் பாதிப்புகளுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் குருவிக்கரம்பை ஆ.பழனிவேலு தலைமை வகித்தார்.  தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் வி.பி.டி. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் எம்எல்ஏ ஜி. பழனிசாமி, மு.அ.பாரதி, சி.பக்கிரிசாமி, ஏ.எம்.மார்க்ஸ் (இந்திய கம்யூனிஸ்ட்), என்.அசோக்குமார், ந.மணிமுத்து (திமுக), எஸ்.ராஜாத்தம்பி, கே.மகேந்திரன்(காங்கிரஸ்),ஆர்.சி.பழனிவேலு, எம்.செல்வம், எஸ்.கந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஜி.தேவசகாயம் (மதிமுக), பழ.சக்திவேல் (நாம் தமிழர் கட்சி), பாலசுந்தரம், பாஸ்கர், நாதன் (தென்னை விவசாயிகள் சங்கம்) மற்றும் ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  நிறைவாக வருவாய் கோட்டாட்சியர் (பொ) கோ.தவச்செல்வத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...